தமிழ் பதிவுகள்

தமிழ் மின்னகராதிகள்

ஆங்கிலம் தமிழ் சிங்களம் மின்னகராதி என்பது ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ், சிங்கள சொற்களை வழங்கும் ஒரு இணைய மின்னகராதி. இது கப்ருகா நிறுவனத்தால் (kapruka) இலவசமாக தரப்பட்டுள்ளது.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலைச்சொற்கள் என்பது தமிழ் துறைசார் கலைச்சொற்களின் மின்னகராதி. பல்வேறு இடங்களில் தொகுக்கப்பட்ட கலைச்சொற்கள் பட்டியல்களாக இங்கு கிடைக்கின்றன. இந்த கலைச்சொற்கள் தானியங்கி மூலம் தமிழ் விக்சனரியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ் விக்சனரி என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு, எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தொடர்கள் முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். தமிழ்-தமிழ், ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பிரன்சிய மொழி, சிங்களம், மலேய மொழி போன்ற பிற மொழிச் சொற்களிலும் இதில் விளக்கம் பெற முடியும்.

தமிழ் எண்ணிம நூலகங்கள்

தமிழ் ஆக்கங்கள் உள்ள எண்ணிம நூலகங்கள்

தமிழ் இணையத்தளங்கள்

கீற்று (இணையத்தளம்) - தமிழ் ... கீற்று தமிழின் முக்கிய சில சிற்றிதழ்களை வெளியிடும் இணையத்தளம் ஆகும்.

தமிழ் அரங்கம் என்பது இடதுசாரி பார்வை கொண்ட ஒரு தமிழ் வலைத்தளம். "வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, இசை, சுற்றுச்சூழல்

வரலாறு (வலைத்தளம்) தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் வரலாற்றை உரிய முறையில் ஆவணப்படுத்தி, இணைய வழி பகிர முன்னெடுக்கப்படும் ஒரு தன்னார்வத் திட்டம் ஆகும். இது கல்கியின் பொன்னியின் செல்வனில் ஆர்வம் உள்ளோரின் ஒரு இணையக் குழுவாகத் தொடங்கியது. அந்த வரலாற்றுப் புதினத்தில் விபரிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதாக தொடங்கிற்று. வரலாறு.காம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுகிறது. நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவர்களின் தலையங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தப்படுகிறது.

வினவு  தமிழ்-இணையத்தளம்

விருபா என்பது தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டித்தரும் வலைத்தளமாகும். இத்தளம் புத்தகங்களின் விவரம், பதிப்பகங்களின் தொடர்பு விவரம், எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் திரட்டித் தருகிறது. நூல்கள் பிரிவுகளாகவும் தொகுக்கப்படுகிறது. குறித்த புத்தகங்களுக்கு ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகளையும் இத்தளத்தில் பார்வையிடலாம். சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.
இத்தகவல்கள் தவிர நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிகள் பற்றிய தகவல்களையும் இத்தளம் தருகிறது. விருபா தளத்தின் நிறுவனர் கணினி வல்லுநர் து. குமரேசன்.

மற்றும் சில தமிழ் வலைப்பதிவுகளின்  இணையதள முகவரிகள்

வீடு திரும்பல் http://veeduthirumbal.blogspot.com/ Mohan Kumar
கோடங்கி http://www.kodangi.com/ இக்பால் செல்வன்
venkatnagaraj http://venkatnagaraj.blogspot.com/ வெங்கட் நாகராஜ்
டி.என்.முரளிதரன் http://tnmurali.blogspot.com/ T.N.MURALIDHARAN
தீதும் நன்றும் பிறர் தர வாரா... http://yaathoramani.blogspot.in/ Ramani
வலைச்சரம் http://blogintamil.blogspot.in/ பொறுப்பாசிரியர்: சீனா ..... ( Cheena )
சாமியின் மனஅலைகள் http://swamysmusings.blogspot.com/ DrPKandaswamyPhD
Cable சங்கர் www.cablesankaronline.com சங்கர் நாராயண் @ Cable Sankar
குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் http://kuttikkunjan.blogspot.in/ kuttan
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.... www.jackiesekar.com ஜாக்கி சேகர்
முத்துச்சரம் http://tamilamudam.blogspot.com/ ராமலக்ஷ்மி

இலக்கியம் பற்றிய தமிழ் வலைத்தளங்கள்

தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் என்பது தமிழ் இலக்கியம், இலக்கியப் போக்குகள், விமர்சனங்கள், விமர்சகர்கள் போன்ற பொருட் பரப்பை உள்ளடக்கிய ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். பயனர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை ம. வேதசகாயகுமார் சு. இராஜேந்திரன் ஆகியோர் முதன்மையாகப் பங்களித்து உருவாக்கி உள்ளனர்.

இணையத் தமிழ் இதழ்கள்

ஆறாம்திணை - தமிழின் முதல் முழுமையான இணைய நாளிதழ் – ’உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் உறவுப் பாலம்’என்ற பதாகையுடன் மகாகவி பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11, 1998 அன்று தொடங்கப்பட்டது.
தமிழ் வாழ்க்கை திணைப் புல வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலம் ஐந்து வகைமைப் படுத்தப்பட்டு அதற்குரிய தொழில்கள் மற்றும் பண்பாடு குறிப்புணர்த்தப்பட்டது தமிழுக்கு மட்டுமேயுரிய சிறப்பு. இன்று நவீன யுகத்தின் வாழ்க்கையோடு மற்றொரு அங்கமாக இணையம் செயல்படத் தொடங்கியதைக் காட்டும் வகையில் இணையத்தையும் ஒரு திணையாக்கி இந்த இதழுக்கு ஆறாம்திணை எனப் பெயரிடப்பட்டது. இணையத்தை ஒரு ஊடகமாக, செய்தித் தொடர்புச் சாதனமாக, குறிப்பாக இதழியல் வழியில் பயன்படுத்தமுடியும் என முதன்முதலில் நிரூபித்த இணைய இதழ். தமிழின் முதன்மையான முன்னணி இணைய இதழ்களில் ஒன்று.

உயிரோசை தமிழகத்தின் உயிர்மை இலக்கிய குழுமத்தின் சார்பில் மனுஷ்யப்புத்திரனால் வெளியிடப்படும் இணைய இதழ். இது ஒரு வார இதழ். செப்டம்பர் 1, 2008 முதல் வெளிவந்துகொண்டிருக்கிறது. திங்கள்கிழமை தோறும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

சிறகு என்பது மாதமிருமுறை வெளிவரும் ஒரு தமிழ் இணைய இதழ் ஆகும். சிறகு இதழில் இலக்கியம், சமூகம், பொருளாதாரம், அரசியல், அறிவியல், பொதுநலம் ஆகிய தலைப்புகளில் செய்திகள், கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள் ஆகியன இடம்பெறுகின்றன.

செம்பருத்தி இணைய இதழ் மலேசியாவிலிருந்து பதிவேற்றம் செய்யப்படும் ஒரு இணைய இதழாகும். இது முன்பு செம்பருத்தி எனும் சிற்றிதழாக 13 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்தது. மலேசியாவின் முன்னணி செய்தி இணைய தளங்களில் ஒன்றான மலேசியகினியின் தமிழ்ப் பிரிவாக இது இயங்கி வருகிறது.

தமிழம் தமிழ் சிற்றிதழ்களை மையப்படுத்தி தகவல் செறிவுடனும், அழகிய வடிமைப்புடனும், காலந் தவறாது இன்றைப்படுத்தப்படும் இணைய இதழ் தமிழம் ஆகும். இந்த இதழ் தமிழ் உணர்வாளரும், புலமையாளரும், சிற்றிதழ் சேகரிப்பாளருமான பொள்ளாச்சி நசனால் வெளியிடப்படுகின்றது. இருபது ஆண்டுகளுக்கு மேலான தமிழ் இதழ்கள் சேகரிப்பாளரான பொள்ளாச்சி நசனின் நூலகத்தில் இருந்து தெரிந்த பழம் இதழ்கள் பற்றிய குறிப்புக்கள், தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் சிற்றிதழ்கள், அவற்றின் ஆக்கர்கள் பற்றிய தகவல்கள், அவற்றில் இருந்து தெரியப்பட்ட சுவையான பகுதிகள், கல்வி ஆராய்ச்சிகள், தமிழ்ப் புலவர்கள் ஆர்வலர்கள் பற்றிய குறிப்புகள் என முற்றிலும் மாறுபட்ட ஒரு படைப்பாக தமிழம் வெளிவருகின்றது.

நிலாச்சாரல் என்பது ஒரு தமிழ் இணைய இதழ். இலண்டனிலிருந்து மே 18, 2001 ஆம் தேதியில் தொடங்கப்பட்ட இந்த இணைய இதழ் இரு வாரங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த இதழில் கதை, கவிதை, கட்டுரை, ஆன்மீகம், சுவடுகள், நகைச்சுவை, சுயமுன்னேற்றம், அரசியல், அறிவியல், பூஞ்சிட்டு, இலக்கியம், திரைச்சாரல், ஜோதிடம், தொடர்கள், கைமணம், கைமருந்து, நேர்காணல், தமிழாய்வு, மாணவர் சோலை எனும் தலைப்புகளில் படைப்புகள் தொகுக்கப்படுகின்றன. இந்த இதழில் தமிழ் தவிர, ஆங்கில மொழியிலும் படைப்புகள் வெளியிடப்படுகின்றன.

பதிவுகள் கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு இணைய இதழ் (சஞ்சிகை) ஆகும். இது 2000 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இன்றைப்படுத்தப்பட்டுவருகின்றது. இவ்விதழ் TSCII தமிழ் கணினி எழுத்துருவை பயன்படுத்துகின்றது. இதன் ஆசிரியர் வ. ந. கிரிதரன் ஆவார்.

முத்துக்கமலம் இணைய இதழ் பல தலைப்புகளைக் கொண்டு அனைத்து வகையான தகவல்களை பல்சுவை இதழாக வழங்கி மாதமிருமுறை (சுழற்சியில்) ஆங்கிலத் தேதிகள் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.


No comments: